சென்னை : கன்னியாகுமரில் நிறுவப்பட்டுள்ள 133 அடி கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று, திருவள்ளுவர் சிலை அருகே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திருக்குறள் கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் […]
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரியில் […]