வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்து வைத்தார். திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் சிவந்தி […]