ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு. ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். […]
டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மின்னொளி வடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் இன்று டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் திறந்து வைத்தார். நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் […]
சென்னை:இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை,அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளதாவது: “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் […]
முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்துள்ளார். அதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். எனவே, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுக்கு புதுச்சேரியில் சிலைகள் அமைக்க பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் 15 வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என்று புதுச்சேரி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி வலியுறுத்தினார். இதனையடுத்து,எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “கடந்த ஆட்சியில் கருணாநிதி சிலை அமைக்க இடங்கள் பார்க்கப்பட்டன. சட்டப்பேரவைக்கு […]
அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை […]
தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்கள், அரசு இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூரை சேர்ந்த வைரசேகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வலக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற 2016 மத்திய […]
உத்திர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்று அரசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அம்பேத்காரின் சிலை அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி எனும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் அனுமதியின்றி அம்பேத்காரின் சிலையை நிறியதற்காக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலையும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூடி தான் 4 பாடியுள்ள இந்த அம்பேத்காரின் சிலையை நிறுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்ட அன்றே அவ்விடத்தில் காவலுக்கு நின்ற […]
ஊட்டியில் கருணாநிதி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு, கருணாநிதி செய்த நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு பேசியுள்ளார்.
திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார். திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார். அதாவது பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த மணிமண்டபத்தில் […]
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர், இவர் டிரம்ப்பிற்க்காக சுமார் 6 அடி உயரமுள்ள சிலை ஒன்று அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் நேரடியாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு […]
பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணியாற்றும் சக காவல் அதிகாரிகள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பரபரப்பு புகார் கூறினர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் , சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் மறுக்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் அரக்கோணம் நெமிலி கோயிலிலிருந்து கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான முருகன் சிலை கடத்திய 3 பேரை போலீஸ் கைது செய்ததுள்ளது. சென்னை அரக்கோணம் நெமிலி கோயிலிருந்து பழமையான முருகன் சிலை கடத்தப்பட்டது.இந்நிலையில் இந்த கடத்தல் விவகாரத்தில் களமிரங்கிய ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழம்பெரும் முருகன் சிலையை மீட்டது.மீட்கப்பட்ட முருகன் சிலையானது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் […]
திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் புதைந்து கிடந்த 4 சிலைகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் கோயில் நிலத்தில் இருந்து 4 கற்சிலைகளான பெருமாள், சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம், திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள இடத்தை தூர்வாரும் போது 4 கற்சிலைகளை பொதுமக்கள் மீட்டனர். தோண்டி எடுக்கப்பட்ட பெருமாள், சக்கரத்தாழ்வார்,ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய 4 கற்சிலைகளையும் பொதுமக்கள் […]
திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் சோதனை செய்து வருகிறார். திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு விரைந்தது.மேலும் சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். மேலும் ரன்விர்ஷா வீட்டில் தமிழக பாரம்பரிய 82 சிலைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில் அத்தனை சிலைகளையும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார் ஆனால் மீட்ட சிலைகலை […]
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்விரைந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன கட்டிடக் கலைகளுக்கும், சோழர்களின் அபாரமான சிற்பக் கலைக்கும் சிறப்பு பெயர் பெற்றது. அங்கு சனிக்கிழமையன்று பிற்பகலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் திடீரென வருகை தந்தனர். அவர்களில் மப்பிட்டியில் 50 காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.பின்னர், […]
நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கலாம் என்று போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி கோவில் நிர்வாகங்கள், வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் […]
30 கோடி மதிப்பிலான ஐம்பொன் நடராஜர் சிலை கண்டுபிடிப்பிடிக்கப்பட்டது.ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திரிநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் 1982-ம் ஆண்டில் நடராஜர் சன்னதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு 600 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னாலான நடாரஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகளும் ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. சிலை கொள்ளை குறித்து கல்லிடைக்குறித்தி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 1984-ம் ஆண்டு […]
வேலூரில் பெரியார் சிலையையும்,திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர். பாஜக கூட்டணி கட்சி திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கம்யூனிஸ்ட் கட்சியனர் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குள் பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் […]
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, பா.ஜ.க.வினர் சிலை உடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய இருமாநில கட்சியினரிடமும் பேசியிருப்பதாகவும், பா.ஜ.க.வில் உள்ள எவரும் எந்தச் சிலை உடைப்புச் சம்பவங்களிலாவது ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிலைகள் உடைப்பு என்கிற செயலுக்கு பா.ஜ.க எப்போதுமே எதிரானது என்றும் அமித் ஷா கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று பெரியார் சிலை […]