கிராம ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி ரூ.609 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின்கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கான 5-வது மாநில நிதி ஆணையத்தின் மானியங்களின்படி கிராம பஞ்சாயத்துகள்,பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மக்கள் தொகை மானியம் ஆகிய மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர்,டிசம்பர் மாதங்களுக்கான வளர்ச்சி நிதியாக ரூ.609,43,59,714 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.