முதல்வராக பூபேந்திர படேலை தொடர்ந்து 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 6 மாநில அமைச்சர்கள் பதவியேற்பு. பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். பூபேந்திர படேலுக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள 8 அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷ் சங்கவி, […]