தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தருவை கூடைப்பந்து மைதானம், விகாசா பள்ளி, லசால் பள்ளி, கிரசண்ட் பள்ளி மைதானங்கள் ஆகிய 4 இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கிறது. போட்டி தொடக்க விழா வருகிற 26-ந்தேதி மாலை 6 மணிக்கு தருவை மைதானத்தில் நடக்கிறது. […]