கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிரியா மரணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தர மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைய தலைவர் […]
மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு விருது வழங்கினார் முதல்வர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர் வெளியிட்டார். இதனையடுத்து, மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார் முதலவர். அதன்படி, மாநில மனித […]