மருத்துவமனையில் ஆக்சிஜனை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.