மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை […]
சென்னை லயோலா கல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கைக்கு பதிலாக மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் உயர் கல்வி பயில தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் குறிப்பிட்டார். ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள் […]