தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.