புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுகவின் மாநில செயலாளர் கோரிக்கை. மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் வரும் 28-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் போராட்டம் நடைபெறும் என மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கின்றனர். சட்டமன்றத்தில் எந்த […]
ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பலப்படுத்த ” சக்தி ‘ என்ற செயலி நாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று சக்தி என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அப்போது ராகுல் காந்தி பிரதமராவார் . அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.