பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பானது பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான பாதிரியார் ஸ்டேன் சுவாமி,ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்தார். இதற்கிடையில்,எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதன் காரணமாக ,இவருக்கு ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, இவருக்கு பார்கின்சன் நோய் ஏற்பட்டதால்,நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி […]