ஸ்ரீஹரிகோட்டா : பேரிடர் காலங்களில் உதவும்படியாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை (EOS-08) எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் உதவியுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த ககன்யான் திட்டம் தான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9.17 மணியளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி3 ரக ராக்கெட் மூலம் EOS-08 (Earth Observation Satellite-8) எனும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்டவுன் இன்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. தற்போது செயற்கைக்கோளானது வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார், 196 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளானது, புவி வானிலை, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியின் […]
சென்னை : இன்று திமுக, அதிமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் பிற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழா, உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து […]