Tag: Srivilliputhur

ஆண்டாள் கோயில் விவகாரம்: ‘சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல’ – இளையராஜா பதிவு!

சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்றைய தினம் (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், […]

#Temple 6 Min Read
Ilaiyaraja - Srivilli puthur

“இளையராஜாவாக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது., காரணம் இதுதான்” கஸ்தூரி பேட்டி

சென்னை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. இது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் ஒன்றையும் அளித்து இருந்தது. அதில், அர்த்த மண்டபத்த்தில் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்று விளக்கம் அளித்து இருந்தது.  இச்சம்பவம் […]

#Chennai 5 Min Read
Actress Kasthuri - Ilaiyaraja Issue

ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுத்தது ஏன்? அறநிலையத்துறை விளக்கம்

சென்னை : நேற்று (டிசம்பர் 15) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், அவர் அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு […]

#Chennai 4 Min Read
Music Director Ilaiyaraja - Srivilliputhur Temple Issue

இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றம் – கோயில் நிர்வாகம் விளக்கம்!

சென்னை :  மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, இதனைமுன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக இளையராஜா கோவிலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் அழைத்து சென்றார்கள்.அப்போது, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சிலர் முகம் சுழித்து கொண்டு அவர் […]

AandalTemple 5 Min Read
srivilliputhur andal temple ilayaraja

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

விருதுநகர் : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, பக்கதர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். அப்படி தான்  இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அப்போது, கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறினார்கள். இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் […]

AandalTemple 3 Min Read
Ilayaraja

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. மாணவர்கள் 4 பேர் பலி.!

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் மினி பஸ் ஒன்று எதிர்பாரா விதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை அதுவுமா இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் […]

#Accident 3 Min Read
virudhunagar accident

விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் பலி!

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன் பட்டியில் ‘ஜெயந்தி பட்டாசு’ என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் சுமார் 60-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை பணிக்காக வந்த ஊழியர்கள், வழக்கம்போல் அவர்களின் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான […]

#Death 5 Min Read
Srivilliputhur

#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

விருதுநகர்:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது.அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இதனால்,ராஜேந்திர பாலாஜியை பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.சுமார் 20 நாட்களாக […]

#ADMK 5 Min Read
Default Image

நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடல் – உணவக உரிமையாளர் சங்கம் அதிரடி முடிவு…!

கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால்,24-ஆம் தேதி முதல் 31-ஆம் […]

lockdown 4 Min Read
Default Image

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம்….

தமிழகத்தில், மீண்டும் அ.தி.மு.க.,  ஆட்சி அமைக்க வேண்டி, திருவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழக  இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு என்பவர், நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் திருவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த […]

#ADMK 3 Min Read
Default Image

நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஊரடங்கு அமல்.!

நாளை முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் அமலில் உள்ளதால் பால் விற்பனை, மருந்தகங்கள், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

curfew 2 Min Read
Default Image