சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து வாங்க இங்கு வந்துள்ளேன். பொதுவுடைமை கட்சிக்கும் நூற்றாண்டு விழா, நல்லகண்ணு ஐயாவிற்கும் நூற்றாண்டு விழா. இதுபோல […]