தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி […]