திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது. திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் பகல் பத்து இரா பத்து என 21 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பகல் பத்தின் முதல் நாள் இன்று துவங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் இன்று பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. கோவிலுக்குள் பிரச்சனையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பக்தர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ரத்தம் சொட்ட ஐயப்ப பக்தர் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. […]
திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும்,வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.100 என்ற ஒரே கட்டண தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் இலவச […]