ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 […]
PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரின் புறநகர்ப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஸ்ரீநகரின் நவ்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், என்கவுன்டர் தொடங்கியது. […]
லடாக்கின் கார்கிலில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல ஸ்ரீநகரின் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் கார்கில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இரவு 7.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. Earthquake of Magnitude:5.0, Occurred on 27-12-2021, 19:01:09 IST, Lat: 35.68 & Long: 75.30, Depth: 137 Km […]
33 நாட்களுக்குள் ஸ்ரீநகர் நகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்தார். ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 33 நாட்களுக்குள் ஸ்ரீநகர் நகரில் 03 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் போலீஸ்/எஸ்எஃப்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். […]
ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிக்கை. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஜெவானில் உள்ள பந்தா சவுக்கில் நேற்று மாலை 6 மணியளவில் ஒரு போலீஸ் பேருந்து மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். காயமடைந்த போலீசாரின் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டங்களை தெரிவித்து […]
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் சன்போரா அருகே பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் ஒரு பெண் லேசான காயமடைந்தனர். சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது படி, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சாலை திறப்பு விழாவிற்கு (ஆர்ஓபி) நிறுத்தப்பட்டுள்ள 29 பட்டாலியனின் துருப்புக்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் […]
ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தடுப்பூசியை போடுவதில் நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரின் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா இதுகுறித்து கூறுகையில், 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் மூலமாக ஊடகவியலாளர், கடை உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா போன்ற வாகனங்களை இயக்குபவர்கள் இந்த திறந்தவெளி தடுப்பூசி மையங்களை எளிமையாக பயன்படுத்தும் நோக்கில் இதை அமைத்துள்ளோம். மேலும், […]
இன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று பயங்கரவாதிகள் எங்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் ஒரு காரில் தப்பிச்சென்றனர். மாலைக்குள் நாங்கள் அந்தக் குழுவை அடையாளம் காண்போம். அந்த மூன்று பேரில் இருவர் அநேகமாக பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் உள்ளூரை சார்ந்தவர் என்று ஒரு மூத்த போலீஸ் […]
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தின் ராம்பாக் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, காலை 7.45 மணியளவில், பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சண்டை நடந்து வந்த நிலையில், தற்போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். , #SrinagarEncounterUpdate: 02 #terrorists killed. Search going on. Further details shall follow. […]
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் மாவட்டத்தின் ராம்பாக் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். காலை 7.45 மணியளவில், தேடல்கள் நடந்து கொண்டிருந்தபோது, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சண்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter has started at #Rambagh area of #Srinagar. Police and CRPF […]
கருப்பு தினமான நாளை வன்முறை நடக்கும் அச்சம் உள்ளதால் இன்று மற்றும் நாளை ஸ்ரீநகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்ட தினமான ஆகஸ்ட் 5ஐ கருப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளதால் வன்முறை சம்பவங்கள் நடக்கும் அச்சம் உள்ள காரணத்தால் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்ரீநகரில் இன்று (ஆகஸ்ட் 4) மற்றும் நாளை (ஆகஸ்ட் 5) ஆகிய இரு நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் […]
சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள்,சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த தாக்குதலில் தொடர்புடைய இருவரை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.ஆனால் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை சுட்டு கொன்றுள்ளதாக […]
ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி 135 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பவித ஏதும் நடைபெறாமல் இருக்க […]
சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற பல தலைவர்கள் ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில்தான் காஷ்மீரில் வன்முறை […]