இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் மே 12-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் […]
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு. இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 22 பேரையும் விடுவிக்க ஊர்க்காவல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தண்டி மீன் பிடித்ததாக பிப்ரவரி 24-ஆம் தேதி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கல் மற்றும் பாட்டில்களை வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். அதனையடுத்து, இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படையினர் நடத்தியதாக்குதலில் சில மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்த […]
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, புதுக்கோட்டை கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது .