இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் […]
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை. இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது […]
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே இலங்கையை சேர்ந்த 2 மீனவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது கடலோர காவல்படை. முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த சுதாகர் (26), ரோஷன் (30) ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருவரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா? என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடுக்கடலில் படகு பழுதானதால் அதிராம்பட்டினம் வந்து சேர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்தாகவும் தகவல் கூறப்படுகிறது.
இலங்கை அரசை கலைக்க 11 கூட்டணி கட்சிகள் அதிபரிடம் வலியுறுத்தல். இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்துமாறு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாச கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிபரிடம் இலங்கை அரசை கலைக்க வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளை இணைத்து […]
ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், நாளை நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை […]
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.இதையடுத்து 8 மீனவர்களையும் இலங்கை அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்ப உள்ளது.