Tag: SriLankaEconomicCrisis

#BREAKING: இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம்.!

நாளை, நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, மதியம் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. […]

#Srilanka 2 Min Read
Default Image

#BREAKING: அரசியல் குழப்பம் – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

பரபரப்பான அரசியல் சூழலில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு. இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கு முன்பு துணை சபாநாயகர் ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். இதனிடையே, 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் […]

#Srilanka 3 Min Read
Default Image

#BREAKING: இலங்கையில் பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி!

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கிறது மகிந்த ராஜபக்ச அரசு. இலங்கையில் ஆளும் (மகிந்த ராஜபக்ச அரசு) எஸ்எல்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் […]

#Parliament 3 Min Read
Default Image

#Breaking:நாடாளுமன்ற துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா!

இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]

#Sri Lanka 4 Min Read
Default Image

#BREAKING: இலங்கை அரசுக்கான ஆதரவு வாபஸ் – இ.தொ.கா அறிவிப்பு!

பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்தார். ஜீவன் தொண்டமானுடன் எம்பி மருதப்பாண்டி ராமேஸ்வரனும் சுயேட்சையாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார […]

#Srilanka 4 Min Read
Default Image