தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர். கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட […]
இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சமீப நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது காரைநகர் கடற்படை […]
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி […]
இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனையடுத்து,கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் […]