இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிகரித்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைச் சமாளிக்க ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முற்பகல், அரசாங்கம் பதவி விலகக் கோரி தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் நாடு முடங்கிய நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரை கொண்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாக தகவல் […]