வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பெருமாள் ரத்தின அங்கி […]
ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்று, பின்னர் சாலை மார்க்கமாக பயணம் செய்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற […]
இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை […]