இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. மறுவாய்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: […]
இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் […]