இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 56 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 56 மீனவர்களையும் விடுவித்து, […]
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தெற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு இலங்கை அரசு பயணத்தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. மேலும் இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]
இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் நாகை மீனவர்களை மிரட்டி 3 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மணியன் தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் திடீரென தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர். அதன்பின் கத்தி, […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்து, 20 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட 8 மீனவர்கள் இன்னும் நாடு […]