தமிழகத்தில் சிறந்த நெய் நிறுவனமான “ஶ்ரீ கிருஷ்ணா” தரமற்ற நெய்யை தயாரிப்பதாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 3டன் எடை கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா நெய்யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த நெய்யில் 5 மாதிரிகள் தஞ்சாவூரில் உள்ள உணவு பாதுகாப்பு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைையின் முடிவில் தரமற்ற போலியானது என்பது அறியவந்தது. இதன் பிறகு அந்நிறுவத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.