சீமான் அண்மையில் ஒரு பிரச்சார மேடையில் எனக்கு பாஸ்போர்ட் கொடுங்க நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுகிறேன் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீ கைலாஷ் பிரதமர் அலுவலகம் என கூறப்படும் டிவிட்டர் கணக்கில் இருந்து சீமானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு பிரச்சாரத்தின் போது, ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை , என் பாஸ்போர்ட்டை கொடுங்கள் நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுவேன்,’ […]
இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒரே நாடாக இருக்காது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தங்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க வில்லை என்றால் தாங்கள் குடியேற கைலாசம் காத்திருப்பதாக சிரித்துக்கொண்டே கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமீப காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சமூகவலைத்தளம் மூலம் அவரது, பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கு போட்டியாக, […]
தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளை போடப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். ஆனால் நித்தியானந்தா அவரது பேஸ்புக் பக்கத்தில் தினமும் அவரது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் தரிசனமும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஒரு உண்மையான கைலாசத்தை தான் […]