சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம்தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 10 மணி முதல் தொடங்கிய […]