Tag: SPSHANMUGANATHAN

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா.!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

#ADMK 2 Min Read
Default Image