சிங்கப்பூரில் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஊரடங்கை வரும் ஜூன் 1-ம் தேதி வரை அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 23,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் “பாஸ்டன் டைனமிக்ஸ்” நிறுவனம் உருவாக்கிய ரோபோ நாய், சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவிற்கு வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. […]