சென்னை : இன்றைய நாளின் (17-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், அஸ்வின் பேட்டி முதல் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் உலக செஸ் போட்டி வரையிலான செய்தி தொகுப்பைப் பற்றி பார்க்கலாம். ஓய்வை குறித்து பேசிய அஸ்வினின் பழைய பேட்டி வைரல்! அஸ்வின் ஒரு பழைய பேட்டியில் தனது ஓய்வைக் குறித்து பேசி இருப்பார் அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “நான் அனில் கும்ப்ளேவின் தீவிரமான ரசிகன். அதனால் அவரது சாதனையான 619 விக்கெட்டுகளை நான் முறியடிக்க மாட்டேன். நான் டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுகள் எடுத்த உடனே எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். அது தான் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்” எனவும் கூறி இருந்தார். இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்பட்ட புதிய சிக்கல்! […]
சென்னை : இன்றைய நாளின் (16-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், சச்சின் சாதனை பற்றிப் பேசிய ரிக்கி பாண்டிங் முதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரையில் உள்ள சில முக்கிய செய்தி தொகுப்புகளைப் பற்றிப் பார்ப்போம். ரிக்கி பாண்டிங் ஸ்பீச் …! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்த்தில் இருந்து வருகிறார். இது பற்றிப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், ‘சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு’ எனக் கூறியுள்ளார். ஜோ ரூட் இந்த பட்டியலில் 12,027 ரன்கள் அடித்து 7-வது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ்-தென்னாபிரிக்கா தொடர்! வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்ததால் முன்னனி வீரர் மலிங்கா ஓய்வு பெற தயார் என அறிவிப்பு. பின் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் 3-வது போட்டியிலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றது.இதனால் விரக்தியடைந்த வேகப்பந்து வீச்சாளரும் […]
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடந்து வந்தது. இந்த, தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடந்தது.இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.பின் இரண்டாவதாக களமிறங்கிய […]
இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடும் திருவிழாவில் ஒன்று இந்த ஐபிஎலும் அடங்கும். இதில் அதிக வயது வீரரை பல இலட்சத்திற்க்கு ஏலம் போன சுவையான நிகழ்வு. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தனது 44-வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுழல்பந்து வீச்சாளராக களமிறங்கியவர் பிரவின் தாம்பே. இவர் இந்த சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 48 வயது நிரம்பிய சுழற் பந்து வீச்சாளரான பிரவின் தாம்பேவின் பெயர் […]
ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக வார்னரும் செயல்பட்டு வந்தனர். ஆஸ்திரேலியா சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதற்கு மூளைக் காரணமாக வார்னர் செயல்பட்டார் என்றும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மூன்று பேருக்கும் தடைவிதித்தது. தடைவிதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்? என்ற […]