இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என அமெரிக்கா கருத்து. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே “ஆக்கபூர்வமான உரையாடலை” மட்டுமே காண விரும்புகிறோம் என அமெரிக்க கூறியுள்ளது. இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போரைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் உரையாடல் என்பது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் நலனுக்கானது எனவும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு குறித்து மே 4-ம் தேதி முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் ட்விட். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையெடுத்து, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா.? அல்லது சில தளர்வுகள் இருக்குமா ? என்று மக்கள் மத்தியில் […]