தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.