உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த […]