*ஞாபக சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவும் கீரையாக திகழ்கிறது வல்லாரைக்கீரை. இதற்கு இணையாக உலகிலேயே வேறெதுவும் கிடையாது என்று கூறலாம். வல்லாரைக்கீரை பொதுவாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளரும்.* *வல்லாரைக்கீரையை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் புளியை சேர்க்க வேண்டாம். ஏனெனில் புளி வல்லாரைக் கீரையின் சக்தியைக் கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேப் போல, உப்பையும் பாதி அளவு சேர்த்து சமைத்தால் போதுமானது.* […]