மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணினி முகப்பு திரையில், “உங்கள் கணினி சிக்கலில் உள்ளது. நாங்கள் அதற்கான புகார்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள் ” என நீல நிற திரை காண்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு கணினி பயனாளர்கள், பிரதான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. […]
ஜெய்ப்பூர் : ஜெய்பூரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனவத்தில் வேலை செய்து வரும் பெண் ஊழியர் கன்னத்தில் அறைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஸ்பைஸ்ஜெட் (Spicejet) விமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதவி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். இவரை அறைந்த இந்த காட்சியானது அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது. மேலும், அரசாங்க அதிகாரியை […]
இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அரசாங்கத்தின் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) ஒரு பகுதியாக அடுத்த வாரம் ரூ.225 கோடியைப் பெற வாய்ப்புள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும், மிகப்பெரிய பங்குதாரருமான அஜய் சிங், ஏர்லைன்ஸ் பங்கு விற்பனை உட்பட பல்வேறு வழிகளில் ரூ.2,000 கோடியை திரட்ட இருப்பதாகக் கூறினார். தற்போது, அஜய் சிங் விமான நிறுவனத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார், அதில் 44.24 சதவீதம் கடன் […]
இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை […]
டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம். அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது. இதனை அறிந்த விமானி உடனடியாக […]
மோசமான வானிலை காரணமாக மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்த நிலையில்,அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான விபத்து தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில்: “மும்பையிலிருந்து துர்காபூருக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் போயிங் பி737 விமானம் நேற்று தரை இறங்கும் போது மோசமான வானிலையை எதிர்கொண்ட நிலையில் விபத்து ஏற்பட்டது.துரதிர்ஷ்டவசமாக ஒரு சில பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.துர்காபூர் வந்தடைந்தவுடன் உடனடி மருத்துவ உதவி […]
முறையாக பயிற்சி பெறாததால் போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.குறிப்பாக,டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் என்று (டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,போதிய அளவில் விமானிகள் இருப்பதால் இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,ஸ்பைஸ்ஜெட் […]
ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளது. மதுரையில் இருந்து விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படயுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மதுரையில் இருந்து விமானம் சேவை கிடையாது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பயணிகள் குறைவு காரணமாக மதுரையில் விமான சேவையை தற்காலிக நிறுத்தி வைப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே அக்.,31ந் தேதி முதல் 2 நீர் வழி விமானாங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் […]
தனியார் துறையை சேர்ந்த விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 62 புதிய சேவைகளை தொடங்கியுள்ளது. அதன்படி புனே-சென்னை-புனே , மதுரை-புதுதில்லி-மதுரை, ஓமன் தலைநகரான மஸ்கட்-புதுதில்லி , மஸ்கட்-அகமதாபாத் உள்ளிட்ட வழித்தடங்கள் இடையே புதிய விமான சேவையையும் , உள்நாட்டு வழித்தடங்களான ஹைதராபாத்-மும்பை, கொச்சி-கொல்கத்தா உள்ளிட்ட தடங்களின் இடையே புதிய பயணிகளுக்கான விமான சேவையையும், சென்னை-கொல்கத்தா இடையே கூடுதல் சேவையையும், தில்லி-கொல்கத்தா, தில்லி -வாராணாசி உள்ளிட்ட தடங்களில் கூடுதல் பயணிகளுக்கான விமான சேவை உள்ளிட்ட 62 புதிய சேவைகளை ஸ்பைஸ்ஜெட் […]
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைத்து பயணிகள் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையெடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றியுள்ளது .ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லியில் […]
நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நான்கு மாதபெண் குழந்தை உயிரிழந்தது.இந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு சூரத் வழியாக சென்றது. சூரத்தில் ப்ரீத்தி ஜிண்டால் என்ற பெண் அவரது நான்கு வயது ரியா என்ற குழந்தை மற்றும் ரியாவின் தாத்தா , பாட்டி ஆகியோர் விமானத்தில் ஏறியுள்ளனர். அப்போது ப்ரீத்தி தனது மகள் ரியாவிற்கு அதிகாலை 5.30 மணியளவில் உணவு கொடுத்து உள்ளார்.அதன் பிறகு குழந்தை தூங்கி உள்ளது.பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையிடம் இருந்து […]
மும்பை-டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்த புகைப்படத்தை விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பகிர்ந்துள்ளார். இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில் “பாதுகாப்பு என்பது எங்களது மிகுந்த அக்கறை, எந்த நேரத்திலும் விமான நிறுவனம் அதனுடன் சமரசம் செய்யாது. தேவையான நடவடிக்கைகளுக்காக நாங்கள் இதை சம்பந்தப்பட்ட தலைவரிடம் நிச்சயமாக தெரிவிப்போம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் ” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு விமானம் நடுவானில் இருக்கும்போது ஒரு ஜன்னல் முற்றிலுமாக […]
டில்லியிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கம் போல டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது இந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர். ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும். 2 பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும் , விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார். இதை […]
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வேலை இழந்த பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில பல மாதங்களாகவே மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இந்த கடன் பிரச்சணையால் தனது விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் சரிவர சம்பளம் தர முடியாமல் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.இந்த நிலையிலும் ஜெட் ஏர்வேஸ் தனது நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. […]
மத்திய அரசின் உதான் திட்டத்தில் தஞ்சைக்கு விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு – தஞ்சை இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறு நகரங்களில் விமான சேவை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் என்னும் தனியார் விமானம், விமான ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளானது. ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையில் செல்ல முயற்சிக்கும் போது மின் விளக்குகளில் மோதியது.விமானம் மோதியதால் ஓடுபாதையில் உள்ள 4 மின் விளக்குகள் சேதமடைந்துள்ளது.