இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும் என்றும்,அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில்,நேற்றைய தினம்,நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில்,உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு […]