டெல்லியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 39 ஜோடி ஏசி சிறப்பு ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. திருவிழா சிறப்பு ரயில்களில் 392 (196 ஜோடிகள்) வருகின்ற அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படும். இந்த சேவைகளுக்கு பொருந்தும் கட்டணம் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மேலும் 8 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த 8 சிறப்பு ரயில்கள் வருகின்ற அக்டோபர் -11ம் தேதி முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், உரிய டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள்ளுக்கு மட்டுமே இந்த சிறப்பு ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில், இந்த சிறப்பு ரயில்களை இயக்கத்தின் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒருசில […]