அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் […]
தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை. பள்ளிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 4 நாட்கள் விடுமுறையின்போது, பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த […]
பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்த முடிவை ஆய்வு செய்து கல்வித்துறை முடிவு எடுக்க உள்ளதாகவும், முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் […]