தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்ற ஜூன் 23ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் காரணமாக தேர்தல் முடிவுகள்இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசானது தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜியாக பணியாற்றிவரும் கீதா அவர்களை நியமித்து உள்ளது. இவர் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிப்பார் என கூறப்படுகிறது.