வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய விதி 43A யை (சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006) வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. புதிய விதியானது, SEZ இல் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது.வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில்,ஒப்பந்த ஊழியர்கள் […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சேலம், நெல்லை, ஒசூரிலும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளுக்கு 1 Gps அலைக்கற்றை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.