சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டள்ளது. அதற்கு பதிலாக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் மாற்று அட்டவனைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் […]
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் […]
சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் […]
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் […]
சென்னை : ஆயுதப்பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 1,175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் அக்.13ம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி,கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், […]
பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19, 484 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 பஸ்களும், பிற இடங்களில் இருந்து 8,748 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 19, 484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, […]
தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டார். இந்த ஆலோசனை முடிந்தபிறகு, பொங்கல் சிறப்பு பேருந்துகள் வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும், மாநிலம் முழுவதும் 19,484 […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் ஊருக்குப் பயணம் செய்ய செய்யவும், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊருக்குத் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 6 இடங்கள் இருந்து மொத்தம் 8,753 பேருந்துகள் இயக்கப்பட்டு மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 553 பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4564 […]
தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பொது மக்களுக்கு அடுத்த 4 தினங்களுக்கு 16,026 பேருந்துகள் இயக்கபட உள்ளது . தீபாவளியை கொண்டாட மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் . அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 9,510 பஸ்கள் சென்னையிலிருந்து,, 5,247 பஸ்கள் பிற ஊர்களிலிருந்தும் 11,12 மற்றும் 13-ஆம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் […]
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கு திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சென்று கண்டுகளிக்க இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு […]
ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 ,79,250 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆண்டுதோறும் ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது. கடந்த 3-ஆம் தேதி சென்னையில் இருந்து வெளியூர் செல்வோருக்கான சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் ஆயுதபூஜையொட்டி, சென்னையில் இருந்து […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியது. வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.இந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அதற்கு முந்தைய நாட்களான 5-ஆம் தேதி,6-ஆம் தேதியும் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் ஆகும். இந்த விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .அந்த வகையில் இந்த முறையும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து […]
தீபாவளிக்கு மொத்தமாக 12, 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால் நேற்று தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் […]