பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் அவரின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், திரையுலகத்தை சார்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எஸ்.பி.பி-க்காக பிரார்த்தனை செய்தனர். […]