ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]