சோவியத் யூனியனின் 42 ஆண்டுகால சாதனையை சமன் செய்த, ஸ்பேஸ்எக்ஸ்.!

ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ், தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரேலிய பூமி-இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ்-ஆல் 61வது ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், R-7 ராக்கெட் ஏவப்பட்ட 64 முயற்சிகளில் 61இல் விண்ணில் செலுத்தப்பட்டு, 42 ஆண்டுகால சோவியத் யூனியனின் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமன் … Read more

ஸ்பேஸ்எக்ஸ், 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை.!

ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டில் தனது 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, புளோரிடாவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து 54 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ்-இன் 60-வது மிஷனாகும். இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங்கின் முதல்  மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் செயற்கைகோள். ஸ்பேஸ்எக்ஸ், பூமியின் குறைந்த சுற்றுப்பாதைகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இப்போது நாம், செயற்கைக்கோள்களை புதிய சுற்றுப்பாதைகளுக்கு … Read more

அண்டார்டிகாவில் நுழைந்த எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க்

எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை அண்டார்டிகாவை வந்தடைந்ததாக தேசிய அறிவியல் அறக்கட்டளை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தனது துருவ சேவையை மெக்முர்டோ நிலையத்தில் புதிதாக பயன்படுத்தப்பட்ட பயனர் முனையத்துடன் சோதிப்பதாக கூறியது. “ஸ்டார்லிங்க் இப்போது ஏழு கண்டங்களிலும் உள்ளது! அண்டார்டிகா போன்ற தொலைதூர இடத்தில், இந்த திறன் ஸ்டார்லிங்கின் ஸ்பேஸ் லேசர் நெட்வொர்க்கால் செயல்படுத்தப்படுகிறது” என்று ஸ்பேஸ்எக்ஸ் ட்வீட் செய்தது. NSF-supported USAP scientists in #Antarctica are over the … Read more

வானில் தெரிந்த நகரும் மர்ம விளக்குகள்.!

கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியது. இந்த விளக்குகளை கான்பூர், லக்னோ, மற்றும் பல உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும்  மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். விளக்குகளின் புள்ளி இடப்பட்ட பாதை ரயில் போல நகர்வதாகவும் கூறினார்கள். அவை UFO (Unidentified Flying Object) எனும் கண்டறியப்படாத பறக்கும் … Read more

புதிய சாதனை படைத்த ஸ்பேஸ்எக்ஸ்

2022 ஆம் ஆண்டின் 32 வது ராக்கெட் ஏவுதலுடன் ஸ்பேஸ்எக்ஸ் அதன் 2021ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2021 இல் 31 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் 2022 இல் 52 பயணங்களைத் தொடங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று(ஜூலை 22) ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டின் 32வது ஏவுதல் வெற்றிகரமாக பூமியின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கான சாதனையை முறியடித்தது. ஸ்பேஸ்எக்ஸ் … Read more

விண்வெளிக்கு சென்ற 4 பேர்.. ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற 4 பேர் பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இதன்மூலம்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின்  ’ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் ’ நிறுவன தலைவர் மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான … Read more

முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற 4 அமெரிக்கர்கள் – ஸ்பேஸ்எக்ஸ் சாதனை..! …!

முதல் முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்களில் 4 பேரை  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4பேர் கொண்ட … Read more

விண்ணிற்கு எறும்புகள்,ஐஸ்கிரீம் மற்றும் ரோபோ கை அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் ….எதற்காக என்று தெரியுமா?..!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள்,அவகோடா பழங்கள், ஐஸ்கிரீம் மற்றும் ரோபோ கை ஆகியவற்றை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. முதல் முறையாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள், இறால்கள், வெண்ணெய் ,அவகோடா பழங்கள் மற்றும் மனித கை அளவிலான ரோபோ கைகள், ஜீரோ க்ராவிட்டி ஆராய்ச்சி பொருட்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, ஐஸ் கிரீம் போன்ற ஏராளமான பொருட்களை அதன் ட்ராகன் கார்கோ ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) விண்ணில் ஏவியுள்ளது. இது ஸ்பேஸ் … Read more

யூனிட்டி-22 விண்கலத்தில் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 6 பேர் கொண்ட குழு !!

விர்ஜின் கேலடிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு ‘யூனிட்டி 22’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது. அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் 6 பேர் விண்வெளி புறப்பட்டனர். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. அந்நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட்  பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் … Read more

இஸ்ரோவின் சாதனையை முறியடித்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்!

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிற நிலையில், இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ராக்கெட்டில் 143 ரக செயற்கைக்கோளை அனுப்பப்பட்டுள்ளன. இது புதிய பாதையை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பி உள்ளது. அது … Read more