போதைப்பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் – எஸ்.பி ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கஞ்சா, புகையிலைப் பொருள் கடத்தலை தடுக்க 3 தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.