வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. […]
நாளை முதல் கேரளாவில் மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் கேரளாவை மழை படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளது .வடகிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும். இன்று கேரளாவில் ஓரிரு மிக இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் .சென்னையில் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை .தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.