தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, தேனி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையால் காரணமாக 4 நகரங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் மழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால், மும்பை சாலைகளில் மழைநீர் பெருமளவு சூழ்ந்துள்ளது. வழக்கமாக அங்கு ஜூன் 10 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்று ஒரு நாள் முன்னதாக பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை, தானே, பல்கார், ராஜ்கட் ஆகிய 4 நகரங்களில் இன்று மிக […]
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அந்தவகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் ஜூன் 3ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதன் காரணமாக […]
இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் ஜூன் 1 ஆம் தேதியில் தான் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும், இந்நிலையில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு மாதங்களில் மழை பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் தென்மேற்கு பருவ […]
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் இறுதிக்குள் மேற்கு ராஜஸ்தானிலிருந்து விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்காலம் திரும்பப் திரும்ப பெய்யவதற்கு அடுத்த இரண்டு நாட்களில் வானிலை மாற வாய்ப்புள்ளது. இதனால், செப்டம்பர் 20 முதல் மேற்கு ராஜஸ்தானில் பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கூறினார். தற்போது பல இடங்களில் […]
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து […]
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மழை வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். ராணுவம், விமானப்படை, […]