Tag: SOUTHU KOREA

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு..!

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் வருகிற 9ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்,  தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள டோங்கே என்ற இடத்திற்கு வந்த ஜோதிக்கு பாரம்பரிய இசையுடன் நடனமாடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 93 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் குவிந்து வருகின்றனர். தென்கொரியாவின் பகைநாடான வடகொரியாவும் இந்தப் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

olymbics 2018 2 Min Read
Default Image